மதுரை, பசுமலையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி 52ம் ஆண்டு விழா

திருப்பரங்குன்றம், ஏப். 10: மதுரை, பசுமலையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியின் 52வது ஆண்டு விழா, வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி தலைவர் எம்.விஜயராகவன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் அ.ராமசுப்பையா ஆண்டறிக்கை வாசித்தார். கௌரவத் தலைவர் எஸ்.ராஜகோபால், கல்லூரி செயலாளர் எஸ்.ஆர்.ஸ்ரீதர், துணைத் தலைவர்கள் ஆர்.ஜெயராம், ஜி.சம்பத், உதவி செயலாளர்கள் என்.சுரேந்திரன், ஆர்.ரெங்கராஜ், பொருளாளர் ஏ.ஆழ்வார்சாமி ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

இந்த விழாவில் இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாநிலத் தலைவர் கு.சாமிதுரை சிறப்பு விருந்தினராகவும், சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் எஸ்.பாஸ்கரன், தலைமை விருந்தினராகவும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மேலும் பல்வேறு போட்டிகள் மற்றும் தேர்வுகளில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி நிர்வாகம் தரப்பில் பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது.

 

Related Stories: