பெருந்துறை திமுக வேட்பாளர் குறித்து வாட்ஸ்-ஆப்பில் அவதூறு: போலீசார் வழக்கு

ஈரோடு,ஏப்.10:பெருந்துறை திமுக வேட்பாளர் குறித்து வாட்ஸ் ஆப்பில் அவதூறு பரப்பியது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியில் திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் போட்டியிடுகிறார்.

தற்போது இவரது பெயரை பயன்படுத்தி தவறாக வாட்ஸ் ஆப்பில் அவதூறு பரப்பி வருகின்றனர். திமுக பெருந்துறை மேற்கு ஒன்றிய செயலாளர் பிரகாஷ், பெருந்துறை போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாட்ஸ் ஆப்பில் அவதூறு பரப்பிய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: