விருதுநகர் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளில் 135 வேட்பாளர்கள் போட்டி: 19 பேர் வாபஸ்

விருதுநகர், ஏப்.10: விருதுநகர் மாவட்டத்தில் ஏழு சட்டமன்ற தொகுதிகளில் 135 வேட்பாளர்கள் போட்டி உறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்ட நிலையில், 19 வேட்பாளர்கள் நேற்று வாபஸ் பெற்றுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் ஏழு சட்டமன்ற தொகுதிகளில் மார்ச் 30 அன்று தொடங்கிய வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 6 அன்று முடிவடைந்தது. இதில் திமுக, அதிமுக, தேமுதிக, காங்கிரஸ், பாஜ, தவெக, நாதக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் வேட்போன தாக்கல் செய்தனர்.

அதில் 188 வேட்பாளர்கள் 250 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இதில் ஏப்.8ல் நடந்த பரிசீலனையில் 34 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 154 வேட்பாளர்கள் மீதமிருந்தனர். இந்த நிலையில் வாபஸ் பெறும் நாளான நேற்று 19 பேர் வாபஸ் வாங்கினர். இதையடுத்து நேற்று பிரதான கட்சிகள் உட்பட சுயேச்சை வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.

இதன்படி, ராஜபாளையத்தில் 22, ஸ்ரீவில்லிபுத்தூரில் 14, சாத்தூரில் 22, சிவகாசியில் 14, விருதுநகரில் 15, அருப்புக்கோட் டையில் 25, திருச்சுழியில் 23 என 135 வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர். இதில் குறைான வேட்பாளர்கள் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகரை தவிர்த்து ராஜபாளையம், சாத்தூர், அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய நான்கு தொகுதிகளின் 1,122 ஓட்டுச்சாவடிகளில் 438 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கூடுதல் தேவையாக உள்ளது. அந்த இயந்திரங்களை அனுப்ப மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

 

Related Stories: