தேங்காய்ப் பால் கோதுமை மலாய்

தேவையான பொருட்கள்:

*கோதுமை ரவை / உடைத்த கோதுமை 1 கப்
*கெட்டியான தேங்காய்ப் பால் 1 கப்
*பால் ½ கப்
*நாட்டுச்சர்க்கரை / வெல்லம் பொடி ½ கப் (ருசிக்கு ஏற்ப)
*ஏலக்காய் பொடி ¼ டீஸ்பூன்
*முந்திரி 6 முதல் 8
*திராட்சை 1 டேபிள் ஸ்பூன்
*நெய் 1 டீஸ்பூன்
*உப்பு ஒரு சிட்டிகை
*தண்ணீர் 1 கப்.

செய்முறை:

*முதலில் கோதுமை ரவையை தண்ணீரில் கழுவி வைக்கவும்.
*ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கோதுமை ரவையை மென்மையாக வேக விடவும்.
*வெந்த பிறகு பால் சேர்த்து சிறிது நேரம் கிளறவும்.
*பிறகு நாட்டுச்சர்க்கரை / வெல்லம் பொடி சேர்த்து கரைய விடவும்.
*பின்னர் கெட்டியான தேங்காய்ப் பால் சேர்த்து 23 நிமிடம் சிம்மில் வைத்து கிளறவும்.
*ஒரு சிறிய கடாயில் நெய் ஊற்றி முந்திரி மற்றும் திராட்சை வறுத்து சேர்க்கவும்.
*இறுதியாக ஏலக்காய் பொடி சேர்த்து கலக்கி இறக்கவும்.
*சுவையான தேங்காய்ப் பால் கோதுமை மலாய் தயாராகும்.

கோதுமை பயன்கள்

*கோதுமை நார்ச்சத்து அதிகம் கொண்டது, ஜீரணத்திற்கு நல்லது.
*தேங்காய் பால் உடலுக்கு சக்தி மற்றும் நல்ல கொழுப்பு வழங்கும்.
*இதயம் ஆரோக்கியமாக இருக்க உதவும்.
*உடலுக்கு உடனடி எனர்ஜி தரும்.
– ஹேமலதா வாசுதேவன்.