முதல்வர் மனைவிக்கு 3 பாஸ்போர்ட் விவகாரம் பவன்கேரா வீட்டில் அசாம் போலீசார் சோதனை

புதுடெல்லி: அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மனைவி 3 நாடுகளின் பாஸ்போர்ட் வைத்திருப்பதாகவும், வெளிநாடுகளில் சொத்து வைத்து இருப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் பவன்கேரா குற்றம் சாட்டியது அசாம் சட்டப்பேரவை தேர்தலில் அனலை ஏற்படுத்தியது. இதையடுத்து பவன்கேரா மீது அசாம் முதல்வர் மனைவி புகார் அளித்தார். இதையடுத்து டெல்லியில் உள்ள பவன்கேரா இல்லத்திற்கு நேற்று அசாம் மற்றும் டெல்லி போலீசார் சோதனையிட சென்றனர்.

அதற்கு முன்பு பவன்கேரா, தெலங்கானா மாநிலம் ஐதராபாத் சென்றுவிட்டார். பவன்கேரா இல்லத்தில் சோதனை நடத்திய பிறகு அங்கு குற்றத்தில் தொடர்புடைய மின்னணு சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அசாம் போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே தன் மீதும் தன் குடும்பத்தினர் மீதும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கப் பயன்படுத்திய ஆவணங்களை சரிபார்க்காததற்காக காங்கிரசை முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கடுமையாகச் சாடினார்.

முதுமையின் காரணமாக கார்கே பைத்தியக்காரனைப் போலப் பேசுவதாக விமர்சித்தார். மேலும் பவன் கேரா பயந்து போய் ஐதராபாத்திற்கு ஓடிவிட்டதாகக் குறிப்பிட்ட முதல்வர், அசாம் காவல்துறை அவரை பாதாள உலகத்திலிருந்து கூடத் தேடிப் பிடித்துக் கொண்டு வரும் என்றார்.இதற்கிடையே ரினிகி புயான் சர்மாவின் 3 நாடுகளின் பாஸ்போர்ட் போலியானது என்று ஒன்றிய வெளியுறவுத் துறை இணையமைச்சர் பவித்ரா மார்கரிட்டா தெரிவித்தார்.

* கார்கேவிடம் அசாம் முதல்வர் மன்னிப்பு கோர வேண்டும்
கார்கேவை பைத்தியக்காரன் என்று விமர்சனம் செய்த அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரியுள்ளது. இதுபற்றி காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தனது எக்ஸ் பதிவில்,’ அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, இந்த நாட்டின் மூத்த தலைவரான கார்கேவை யார்? என்று கேட்பதும், பைத்தியம் என்று அவதூறுகளைப் பயன்படுத்துவதும் மிகவும் ஆட்சேபிக்கத்தக்கது;

கார்கேவை அவமதித்ததற்காகவும், இந்த கண்டிக்கத்தக்க நடத்தைக்காகவும் அசாம் முதல்வர் மன்னிப்பு கோர வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையேஅசாம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாகக் கூறப்படும் ‘வெறுப்புப் பேச்சு’ தொடர்பாக, அவர் மீது அசாம் போலீசில் பாஜ புகார் செய்துள்ளது. பாஜ தெரிவித்தது.

Related Stories: