பெண்கள் அதிகாரமளித்தலுக்கு என்டிஏ அரசு முன்னுரிமை: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: தேசிய ஜனநாய கூட்டணி அரசானது எப்போதும் பெண்கள் அதிகாரமளிப்பதற்கு முன்னுரிமை அளித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒன்றிய அமைச்சர் அன்னபூர்ணா தேவி பெண்களின் சட்டமன்ற தலைமைத்துவத்தை மேம்படுத்துதல் என்ற தலைப்பில் செய்திதாளில் கட்டுரை எழுதி இருக்கிறார். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில், இந்த கட்டுரை பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் அளிப்பது என்பது எவ்வாறு ஒரு வலிமையான, அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகத்திற்கும் ஒரு வளர்ந்த இந்தியாவிற்கும் மிக முக்கியமானது என்பதை சுட்டிக்காட்டியிருந்தது.

பிரதிநிதித்துவம் என்பது உண்மையான தாக்கமாக மாற வேண்டும். அரசு எப்போதும் பெண் சக்திக்கு அனைத்து வடிவங்களிலும் முன்னுரிமை அளித்து வருகின்றது. பெண்கள் இட ஒதுக்கீடு சட்டம் அதற்கான அடித்தளத்தை அமைத்துள்ள நிலையில் இந்தியா பெண்களை முன்னிறுத்திய சிறந்த நிர்வாகத்தை நோக்கி முன்னேறி வருகின்றது. இது வளர்ந்த இந்தியாவின் ஒரு முக்கிய தூணாக திகழ்கிறது\\” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: