3 ஓவரில் நின்ற டி20 ஈடன் கார்டனில் ஆடிய மழை

 

கொல்கத்தா: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் இடையிலான ஐபிஎல் டி20 போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. ஐபிஎல் 19வது தொடரின் 12வது போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் திடலில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதையடுத்து, அந்த அணியின் துவக்க வீரர்களாக கேப்டன் அஜிங்கிய ரஹானே, ஃபின் ஆலன் களமிறங்கினர். முதல் ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங் 12 ரன்கள் கொடுத்தார். 2வது ஓவரை வீசிய சேவியர் பார்ட்லெட், 4வது பந்தில், ஃபின் ஆலனை (6 ரன்) ஆட்டமிழக்கச் செய்தார். அடுத்து வந்த கேமரூன் கிரீன் முதல் பந்தில் பவுண்டரி அடித்தார். இருப்பினும், அந்த ஓவரின் கடைசி பந்தில், பிரப்சிம்ரன் சிங்கிடம் கேட்ச் தந்து பரிதாபமாக வெளியேறினார்.

அதனால், 2 ஓவரில் 16 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து கொல்கத்தா அணி திணறியது. அதன் பின், குளிர்ந்த காற்று வீசத் துவங்கிய நிலையில், 3.4 ஓவரில் கொல்கத்தா 2 விக்கெட் இழப்புக்கு 25 ரன் எடுத்திருந்த போது ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின் மழை பெய்யத் துவங்கியதால், மீண்டும் ஆட்டத்தை துவக்க முடியாமல் தாமதம் ஆனது. அதன் பின் மழை விட்டபோதும், குளிர்ந்த காற்று ஒரு புறம் வீச, மறுபுறம் மைதானத்தில் தண்ணீர் தேங்கிக் கிடந்ததால், 9 மணி வரை போட்டி மீண்டும் ஆட்டத்தை துவக்க முடியாத சூழல் காணப்பட்டது.

 

Related Stories: