மதுரை, ஏப். 8: மதுரையின் தொழில் வளர்ச்சிகேற்ப புதிய சாலைகள், மேம்பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகள் திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி கோரிப்பாளையம், மேலமடை சந்திப்புகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளதுடன், வைகை வடகரையில் சமயநல்லூர் முதல் ஆரப்பாளையம் வரை, விரகனூரிலிருந்து – சக்குடி வரை புதிய பைபாஸ் சாலை அமைக்கும் பணி நடந்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக மதுரை – திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் மண்டேலா நகர் முதல் விமான நிலையம் வரையிலான சுமார் 2.5 கிமீ தூர சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ரூ.9 கோடியில் நடந்துள்ள இப்பணிகளால் விமான நிலையம் வருவோர் சிரமமின்றி பயணிக்க முடிவதுடன், குறித்த நேரத்தில் விமான நிலையம் செல்ல முடிகிறது. இப்பணிகளை மேற்கொண்ட தமிழக அரசுக்கு வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
