நுகர்வோர் பாதுகாப்பு மையம் வலியுறுத்தல் நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் காளான் பதப்படுத்துதல் மதிப்புகூட்டுதல் பயிற்சி

நீடாமங்கலம், பிப்.19: நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் காளான் பதப்படுத்தல் மற்றும் மதிப்புக் கூட்டுதலுக்கான பயிற்சி நடைபெற்றது. இதில் விவசாயிகள் பங்கேற்று பயன்பெற்றனர். பயிற்சி நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமசுப்பிரமணியன் வணிக முறைகள் குறித்து விளக்கினார். உதவி பேராசிரியர்கள் அனுராதா ஜெகதீசன், ராதாகிருஷ்ணன், செல்வமுருகன், திட்ட உதவியாளர் ரேகா உள்ளிட்டோர் கலந்துகொண்டு பயிற்சியளித்தனர். காளான் உற்பத்தி செய்யும் 20 விவசாயிகள் கலந்துகொண்டனர். இப்பயிற்சியில் காளானை எவ்வாறு பதப்படுத்தி சந்தை விற்பனைக்கு தகுந்தவாறு விற்பனை செய்யலாம் என்பதை செயல்முறை விளக்கமாக கற்றுத்தரப்பட்டது.இதில் காளான் அறுவடை செய்யும் பருவம் முதல் அதை பதப்படுத்தும் முறைகளான குறுகிய கால இருப்பு வைக்கும் முறை மற்றும் நீண்ட கால சேமிப்பு முறைகள் கற்றுத்தரப்பட்டது. உலர் காளான் பொடி, காளான் பொடியை கொண்டு தயாரிக்கும் பொருட்களான சூப், மிக்ஸ், பஜ்ஜி மிக்ஸ், போண்டா மிக்ஸ், சப்பாத்தி மிக்ஸ், வடகம், பிஸ்கட்ஸ் மேலும் இந்த மிக்ஸை பயன்படுத்தி சப்பாத்தி சூப், காளான் ஊறுகாய் செய்யும் முறைகளை செயல்முறை விளக்கமாக உணவியல் துறை பேராசிரியர் கமலசுந்தரி எடுத்துரைத்தார்.

வங்கியிலிருந்து மானியம், கடன் வசதி பெறுவதற்கான திட்ட தயாரிப்பு மற்றும் திட்டங்கள் குறித்து விளக்கம் பெறப்பட்டது.

Related Stories: