மத்திய கிழக்கு போர் பதற்றம் காரணமாக பகுதியளவு பொதுமுடக்கத்தை அமல்படுத்திய பாகிஸ்தான்

பாகிஸ்தான்: மத்திய கிழக்கு போர் பதற்றால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க, மின்சாரம் மற்றும் எரிபொருளைச் சேமிக்க பகுதியளவு பொதுமுடக்கத்தை பாகிஸ்தான் அரசு.இன்றுமுதல் அமல்படுத்தியது. இதன்படி கடைகள், வணிக வளாகங்களை இரவு 8 மணியுடன் மூட வேண்டும், உணவகங்கள், திருமண அரங்குகள் 10 மணிக்கு மேல் செயல்படத் தடை விதித்து பிரதமர் ஷபாஸ் ஷரிஃப் தலைமையில் நடந்த அரசு உயர்மட்டக் குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகுக்கு தேவையான 25 சதவீதம் அளவிலான கியாஸ், பெட்ரோல், டீசல் மற்றும் கச்சா எண்ணெய் பொருட்கள் இதன் வழியாக விநியோகம் ஆகி வந்த நிலையில் ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடிய விவகாரம் நேரடியாக பல நாடுகளில் எதிரொலித்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் இறக்குமதியை நம்பியுள்ள பல நாடுகளில் எரிபொருள் மற்றும் கியாஸ் தட்டுப்பாடு ஏற்பட்டது. குறிப்பாக ஆசியா நாடுகளான சீனா, ஜப்பான், பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை உள்ளிடவற்றில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு தாறுமாறாக விலை உயர்ந்தது. மேலும் இது நேரடியாக அந்தந்த நாடுகளின் பொருளாதாரத்தை பலம் இழக்க செய்தது. போரை முடிவுக்கு கொண்டு வர ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் நாடுகளுடன் மத்தியஸ்தம் செய்ய முயற்சி செய்து வருகின்றன.

பாகிஸ்தான் விதித்த முக்கிய கட்டுப்பாடுகள்:
* வணிக நேரம்: கடைகள் மற்றும் சந்தைகள் இரவு 8 மணிக்கு மூடப்பட வேண்டும்.
* உணவகங்கள்: உணவகங்கள் மற்றும் திருமண அரங்குகள் இரவு 10 மணிக்கு மேல் செயல்படத் தடை.
இந்த கட்டுப்பாடுகள் மாகாணங்களின் ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்தப்படுகின்றன, எனினும் சில மாகாணங்கள் பொருளாதார பாதிப்பு காரணமாக முழு லாக்டவுனை எதிர்த்தன.

Related Stories: