அமெரிக்க அதிபர் பதவி முடிந்த பிறகு வெனிசுலா அதிபர் பதவிக்கு போட்டியிட போகிறேன்.! டிரம்ப் நகைச்சுவை

வெனிசுலா அதிபர் தேர்தலில் போட்டியிட்டால் தமக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்து உள்ளார். தமது அமெரிக்க அதிபர் பதவிக்காலம் முடிவு பெற்றதும் வெனிசுலா செல்ல விரும்புவதாகவும் நகைச்சுவையாக கூறி இருக்கிறார்.

எனக்கு சிறப்பான மொழித்திறன் உண்டு, எனவே ஸ்பானீஷ் மொழியை விரைவில் கற்றுக்கொள்வேன். வெனிசுலாவில் தனக்குப் பெரும் செல்வாக்கு இருப்பதாகவும், இந்த நிலையில் வெனிசுலா அதிபர் தேர்தலில் நான் போட்டியிட்டால் இதுவரை யாரும் பெற்றிராத அளவுக்குத் தான் அதிக வாக்குகளைப் பெறுவேன் என்று டிரம்ப் நகைச்சுவையாக கூறினார்.

“வெனிசுலா மக்கள் என்னிடம், ‘நான் வெனிசுலா அதிபர் பதவிக்குப் போட்டியிட்டால், வெனிசுவேலாவின் வரலாற்றிலேயே வேறு எவரும் பெற்றிராத அளவுக்கு அதிக வாக்குகளைப் பெற்று முன்னிலையில் இருப்பேன்’ என்று கூறுகிறார்கள்; எனவே நான் அமெரிக்க அதிபர் பதவி காலத்தை முடித்த பிறகு, வெனிசுலாவுக்குச் செல்லலாம் என்று நினைக்கிறேன்” என்று டிரம்ப் நகைசுவையாக கூறினார். தொடர்ந்து பேசிய டிரம்ப் பிற மொழிகளைக் கற்பதில் நான் வல்லவன் என்பதால் மிக விரைவாக ஸ்பானிஷ் மொழியை நான் கற்று கொண்டு விடுவேன்.

இருப்பினும், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வெனிசுலா அதிபரைப் பற்றி நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடனேயே இருக்கிறோம் என்று கூறினார். இந்த ஆண்டின் ஜனவரி மாதம் வெனிசுலா அதிபராக இருந்த நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வெனிசுலாவின் துணை அதிபரான டெல்சி ரோட்ரிக்ஸ் இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றார். இதனிடையே செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய டிரம்ப், வெனிசுலாவுடனான மோதல் “45 நிமிடங்களிலேயே முடிவுக்கு வந்துவிட்டது” என்று குறிப்பிட்டார். மேலும் அந்த நாட்டிலிருந்து அமெரிக்கா தற்போது கோடிக்கணக்கான பீப்பாய் கச்சா எண்ணெயை எடுத்து கொண்டுள்ளதாக பெருமையுடன் குறிப்பிட்டார். வெனிசுலாவிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெய் தற்போது சுத்திகரிக்கப்பட்டு விற்பனைக்கும் சென்றுவிட்டது. அந்த போருக்காகச் செலவிடப்பட்ட தொகையைவிடப் பல மடங்கு அதிகமான வருவாயை நாங்கள் இதன் மூலம் ஈட்டிவிட்டோம் என்றும் அதிபர் டிரம்ப் கூறி இருக்கிறார்.

Related Stories: