திருத்துறைப்பூண்டி அரசு கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்

திருத்துறைப்பூண்டி, ஏப். 6: திருத்துறைப்பூண்டி அரசு கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நடந்தது. திருத்துறைப்பூண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் மூன்றாம் நாள் விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மாறன் தலைமை வகித்தார். வேளூர் ஊராட்சியில் உள்ள ஸ்ரீ சொர்ணபுரீஸ்வரர் ஆலய தூய்மைப் பணி நடைபெற்றது.

இப்பணியினை சமூக ஆர்வலரும், முன்னாள் ஊராட்சி தலைவருமான ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார். கோயில் பிரகாரத்தில் உள்ள முட்புதர்களையும், புற்களையும் சுத்தம் செய்தனர். தூய்மைப் பணியில் ஈடுபட்ட மாணவர்களை ஆன்மீகவாதிகளும், பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டினர். இப்பணி நாட்டு நலப்பனித் திட்ட (அலகு-1) அலுவலர் ராஜமாணிக்கம் மற்றும் நாட்டு நலப்பனித் திட்ட (அலகு-2) அலுவலர் ஓம்பிரகாஷ் ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்றது.

 

 

Related Stories: