கறம்பக்குடி அருகே வைக்கோல் தீயில் எரிந்து சாம்பல்

கறம்பக்குடி, ஏப்.6: கறம்பக்குடி அருகே ஆஸ்பட்டாஸ் கொட்டகையில் வைக்கபட்டிருந்த வைக்கோல் தீபிடித்து எரிந்து சேதம் அடைந்தது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கெண்டையன் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (55) விவசாயி. இவர் தனது வீட்டின் அருகே ஆஸ்பட்டாஸ் கொட்டகையில் வைக்கோல் கட்டுகளை வைத்துள்ளார்.

நேற்று காலை வைக்கோல் கட்டுகள் திடீரென்று தீ பிடித்து எரிந்துள்ளது. உடனடியாக கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். கறம்பக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் பாபில் குமார் தலைமையில் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று வைக்கோல் போர் முழுவதும் எரிவதற்குள் தீயை அனைத்தனர்.

 

 

Related Stories: