சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதால் திருப்பூர் மேயர் ராஜினாமா

திருப்பூர், ஏப்.5: திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக மேயர் தினேஷ்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். முன்னதாக நேற்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளரை நேரில் சந்தித்து மேயர் மற்றும் 49வது மாமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை தினேஷ்குமார் வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜனநாயக ரீதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு தேர்தலை சந்திப்பதற்காக வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பாக ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளேன்.

கடந்த 4 ஆண்டுகளில் மேயராக மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு பல்வேறு நலத்திட்ட பணிகள் முறையாக செய்யப்பட்டுள்ளது என்றார். இதனிடையே நேற்று மாநகராட்சி ஆணையாளர் அமீத் தலைமையில் அவசர கூட்டம் நடந்தது. இதில் மேயர் தினேஷ்குமாரின் ராஜினாமா கடிதம் முன் வைக்கப்பட்டது. இதில் ராஜினாமா கடிதம் ஒருமனதாக ஏற்கப்பட்டது.

 

Related Stories: