மே 20ல் தேர்வு முடிவு 10ம் வகுப்பு தேர்வு இன்றுடன் நிறைவு

 

சென்னை: கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு தேர்வு இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து, தேர்வு முடிவுகள் மே 20ம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு மார்ச் 11ம் தேதி தொடங்கியது. இந்த தேர்வுகள் இன்றுடன் முடிகிறது. பள்ளிகள் மூலம் 8 லட்சத்து 82 ஆயிரத்து 806 பேர் மற்றும் தனித் தேர்வர்கள் 26 ஆயிரத்து 196 என மொத்தம் 9 லட்சத்து 9 ஆயிரம் பேர் பங்கேற்றனர். சொல்வதை எழுதுபவர் சலுகையை பயன்படுத்தும் மாற்றுத் திறனாளித் தேர்வுகளுக்கு வழங்க 5 கேள்வித்தாள்கள் கேள்வித்தாள் உறை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நடைமுறை காரணமாக, கேள்வித்தாளின் ரகசியம் மற்றும் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படுகிறது. சொல்வதை எழுதுவோர் நியமனங்களில் பிஎட், டிடிஇடி, கலைக் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் மற்றும் இல்லம் தேடிக் கல்வி பணியாளர்களை தன்னார்வலர்களாக நியமிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.

நேரடித் தனித் தேர்வர்கள் இருப்பிட முகவரியை உறுதி செய்யவும், அந்தந்த மாவட்டங்களில் விண்ணப்பிப்பதை உறுதி செய்யவும், ஆதார் அட்டை சரிபார்க்கப்பட்டு விவரங்கள் பதிவேற்றம் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஆண்டு பொதுத் தேர்வில் பங்கேற்க உள்ள பள்ளிகளை பொருத்தவரையில் பத்தாம் வகுப்பு-12 ஆயிரத்து 467 பள்ளிகள் இடம் பெற்றுள்ளன. பத்தாம் வகுப்பு தேர்வுக்கு சொல்வதை எழுதுவோர் 12 ஆயிரத்து 292 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகள் ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் இன்று விருப்ப மொழிப்பாடங்களுக்கான தேர்வு நடக்கிறது. இத்துடன் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவடைகிறது. தேர்வுத்துறை ஏற்கெனவே அறிவித்தபடி விடைத்தாள் திருத்தும் பணி்கள் தற்போது தொடங்கியுள்ளன. மே 20ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடவும் தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.

 

Related Stories: