சென்னை: சமீப நாட்களாக கடுமையான சர்ச்சைகளுக்கு ஆளாகி, சோஷியல் மீடியாவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறார், நடிகை திரிஷா. சில தினங்களுக்கு முன்பு, தனது இஸ்ஸி என்ற வளர்ப்பு நாயை கோயிலுக்கு அழைத்துச் சென்று, அதனுடன் செல்பி எடுத்து பதிவிட்டிருந்தார். அவரது செயலுக்கு கடும் கண்டனம் எழுந்தது.
இந்நிலையில், நேற்று தனது சோஷியல் மீடியாவில் காதல் பற்றி திரிஷா வெளியிட்டுள்ள பதிவு ஒன்று பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அப்பதிவில் அவர், ‘காதல் மட்டுமே எல்லாம் அல்ல. ஆனால், காதல் இல்லாமல் அனைத்தும் அர்த்தமற்றது’ என்று பதிவிட்டுள்ளார். திரிஷாவை சுற்றி பல்வேறு விவாதங்கள் நடந்து வரும் சூழ்நிலையில், காதல் குறித்து இப்படி அவர் பதிவிட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. திரிஷா குறிப்பிட்டது அன்பை பற்றித்தான் என்று, அவருக்கு ஆதரவாக சிலர் குரல் கொடுத்து வருகின்றனர்.
