சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து நீடித்து வரும் வறண்ட வானிலை காரணமாக 5 மாவட்டங்களில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது. கடலோரத்தில் ராயலசீமா முதல் மன்னார் வரைகுடா வரையில் நிலை ெகாண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பாதை(Trough) நீடித்து வருவதால் தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வறண்ட வானிலை நீடித்துவரும் நிலையில் வெப்பசலனம் காரணமாக ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை கணிசமாக குறைந்ததை அடுத்து, தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் 90மிமீ மழை பெய்துள்ளது. இதற்கிடையே உள் மாவட்டங்களில் வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரித்து காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஈரோடு, திருச்சி, கரூர், மதுரை, வேலூர் மாவட்டங்களில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது. அதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்ைக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், வளி மண்டலத்தில் சுமார் 0.9 கிமீ உயரத்தில் ராயலசீமா மற்றும் அதை ஒட்டிய பகுதிகள் முதல் மன்னார் வளைகுடா வரை தமிழகம் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக விருதுநகர், தேனி மாவட்ட மலைப்பகுதிகள், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். விருதுநகர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. 7ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதேநிலை 11 தேதி வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வெப்பநிலையை பொருத்தவரையில் வட தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி வரையில் படிப்படியாக உயரும் வாய்ப்புள்ளது. தென் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்துக்கான வாய்ப்பு குறைவு. 8,9ம் தேதிகளில் இயல்பை ஒட்டியே இருக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலம், வெப்பநிலை 100 டிகிரியை ஒட்டியே இருக்கும்.
