சென்னை: ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதிக்கு, ஆர்.கே. நகர் மாரி, திரு.வி.க. நகர் சட்டமன்ற தொகுதிக்கு கல்யாணி பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை : தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் தொகுதிக்கு செங்கல்பட்டு தெற்கு மாவட்டத் தலைவர் ஹைவே இன். இளங்கோ பொறுப்பாளராக செயல்பாடுவார்.
சென்னை மாவட்டம் ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதிக்கு, ஆர்.கே. நகர் மாரி, திரு.வி.க. நகர் சட்டமன்ற தொகுதிக்கு கல்யாணி பொறுப்பாளர்களாக செயல்படுவார்கள். கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு பொள்ளாச்சி மணிகண்டன் பொறுப்பாளராக செயல்படுவார். அனைவரது பணி சிறக்க நல் வாழ்த்துக்கள். நமது இயக்க நண்பர்கள் மேற்கண்டவர்களுக்கு முழு ஒத்துழைப்பு தந்து இயக்கப்பணியாற்றி வலு சேர்க்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
