என்.டி.ஏவுக்கு ஓட்டு நோட்டாவிற்கு போடும் வாக்கு: குளோஸ் பண்ணிய செங்ஸ்

கோபி: கோபி அருகே உள்ள நம்பியூரில் தவெக தேர்தல் அலுவலகத்தை தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: என்.டி.ஏ. கூட்டணியை பொறுத்தவரை இன்று வரை அவர்களால் திமுகவை வீழ்த்த முடியவில்லை. நான்கு பொது தேர்தல்கள், உள்ளாட்சித் தேர்தல்கள் என 10 முறை தோல்வியை கண்டார்களே தவிர ஒருமுறை கூட வெற்றி பெற முடியவில்லை. ஆகவே அவர்களுக்கு அளிக்கும் வாக்கு நோட்டாவிற்கு அளிக்கும் வாக்கை போல தான் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: