போடியில் பரபரப்பு கோயில் திருவிழா தகராறு வாலிபருக்கு கத்திக்குத்து

போடி, ஏப். 5: கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கத்தியால் குத்திய இருவரை போலீசார் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர்கள் 18 வயது மதிக்கத்தக்க வாலிபர்கள் இருவர், பாலாஜி(20). இதில், பாலாஜி மற்றும் 18 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஆகியோர் நண்பர்கள் ஆவர். இந்நிலையில், இங்கு மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா நடந்தது. இதில் மூன்று பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் விலக்கிவிட்டனர். பின் 18 வயது வாலிபர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

அவரது வீட்டிற்கு சென்ற பாலாஜி மற்றும் அவரது நண்பர் ஆகியோர் அந்த வாலிபரிடம் தகராறு செய்து கத்தியால் குத்தியுள்ளனர். மேலும் எங்கள் வழியில் குறுக்கிட்டால் கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர். காயமடைந்த 18 வயது மதிக்கத்தக்க போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போடி போலீசார் தலைமறைவான பாலாஜி மற்றும் அவரது நண்பர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

 

Related Stories: