திருவள்ளூர், ஏப்.5: திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணைய சிறப்பு பார்வையாளர் பிரதாப் சிங் ஆய்வு செய்தார். திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் `தேர்தல் திருவிழா – தமிழ்நாட்டின் பெருவிழா’ சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026ஐ முன்னிட்டு திருவள்ளுர் மாவட்ட பொது பார்வையாளர்கள், காவல் பார்வையாளர்கள், உதவி செலவினப் பார்வையாளர்கள் மற்றும் வருமான வரித்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான மு.பிரதாப் முன்னிலை வகித்தார். இந்திய தேர்தல் ஆணைய சிறப்பு பார்வையாளர் பிரதாப் சிங் தலைமை தாங்கி, சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு ஆய்வு மேற்கொண்டார். கூட்டத்தில் ஆவடி மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா, உதவி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான ச.சுரேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும், இணை இயக்குநருமான வை.ஜெயக்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) டீ.ராம், பல்வேறு துறை சார்ந்த முதல்நிலை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் ஆணைய சிறப்பு பார்வையாளர் ஆய்வு
- தேர்தல் ஆணையம்
- திருவள்ளூர் கலெக்டரேட்
- திருவள்ளூர்
- இந்திய தேர்தல் ஆணையம்
- சிறப்பு
- பிரதாப் சிங்
- தேர்தல் விழா
- தமிழ்
- தமிழ்நாடு
- 'மாபெரும் விழா'
- சட்டமன்ற பொதுத் தேர்தல்
