மேட்டூர், ஏப்.5: மேச்சேரி ராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. மேச்சேரி ராகவேந்திரா கல்வி அறக்கட்டளையின் கீழ் இயங்கும் ராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் ராகவேந்திரா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில் யுகேஜி பயிலும் மழலையர்களுக்கு பட்டம் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. பள்ளியின் நிறுவனர் மணிவண்ணன் விழாவிற்கு தலைமை வகித்தார். பள்ளியின் நிர்வாக இயக்குனர் கவுசல்யா மணிவண்ணன் முன்னிலை வகித்தார். பள்ளியின் இணை இயக்குனர் சுகன்ராஜ், மாணவர்களுக்கு பரிசு, பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். பள்ளியின் முதல்வர்கள் வனிதா, திலகவதி மற்றும் குழந்தைகளின் பெற்றோர்களும், பட்டம் பெற்ற குழந்தைகளை வாழ்த்தி பேசினர்.
ராகவேந்திரா மெட்ரிக் பள்ளியில் பட்டமளிப்பு விழா
- ராகவேந்திரா மெட்ரிகுலேஷன் பள்ளி
- மேட்டூர்
- மேச்சேரி
- ராகவேந்திரா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, நர்சரி
- ஆரம்ப பள்ளி
- ராகவேந்திரா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி
- ராகவேந்திரா நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளி
- ராகவேந்திரா கல்வி அறக்கட்டளை
