போடி, ஏப். 5: போடி நகர் காவல் நிலைய எஸ்ஐ குருகவுதம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். குலாலர்பாளையம் வாமணன் தெரு பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டபோது, அப்பகுதியை சேர்ந்த சுரேஷ் (48), மது பாட்டில்களை பதுக்கி வைத்து, விற்பனை செய்வது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடமிருந்த ஐந்து மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிந்த போலீசார், அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
