தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் பெரியகோயிலில் கட்டிடக்கலை மரபு நடைபயணம்

தஞ்சாவூர், ஏப்.5: தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் கட்டிடக்கலை மரபு நடைபயணம் தஞ்சாவூர் பெரிய கோவிலில் நேற்று நடைபெற்றது. தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் கட்டிடக்கலை மரபு நடைபயணம் தஞ்சாவூர் பெரிய கோவிலில் தொடங்கி அரண்மனை வழியாக தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் நிறைவு பெற்றது. இதில் சோழர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள், ஆங்கிலேயர்கள் ஆகியோருடைய கட்டிடக்கலை குறித்து எழில் கலைஞர் நாவளவன் விளக்க உரையாற்றினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர், பொறியாளர் முத்துகுமார் செய்திருந்தார். இந்நிகழ்வில் மாவட்ட சுற்றுலா அலுவலர் வரதராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நடை பயணத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் 100% வாக்களிக்க வேண்டும். ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். பொதுமக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

 

 

Related Stories: