வேளாங்கண்ணி அருகே கார் மீது பைக் மோதி பைனான்ஸ் ஊழியர் பலி

நாகப்பட்டினம், ஏப்.5: வேளாங்கண்ணி அருகே கார் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பைனான்ஸ் கம்பெனி ஊழியர் பலியானார். மற்றொருவர் காயமடைந்தார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மேலநங்கம் தெருவைச் சேர்ந்தவர் நிஷாந்த் (35). இவர் தனியார் பைனான்ஸ் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.அதேபகுதியை சேர்ந்த மீனாசிஅம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலசுந்தரம் (40). இரண்டு பேரும் நண்பர்கள். இவர்கள் இரண்டு பேரும் மோட்டார் சைக்கிளில் வேளாங்கண்ணியில் இருந்து நாகப்பட்டினம் நோக்கிச் சென்றனர்.

அப்போது வேளாங்கண்ணி அருகே பரவை சாலையில் சென்றபோது எதிரே வந்த சொகுசு கார் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இரண்டு பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயமடைந்த நிஷாந்த் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்த வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து, நிஷாந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த பாலசுந்தரம் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

 

Related Stories: