12 வயது சிறுமிக்கு தொந்தரவு: வடமாநில வாலிபருக்கு அடி

பெரம்பூர்: 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வடமாநில வாலிபரை சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த 39 வயது பெண்ணின் கணவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இறந்துவிட்டார். இவரது 12 வயது மகள் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 2ம் தேதி சிறுமி தனது பாட்டி வீட்டுக்கு சாப்பாடு எடுத்துசெல்லும்போது அதே பகுதியை சேர்ந்த ஒருவர் திடீரென அந்த சிறுமியை அழைத்து தவறான முறையில் சைகை செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி, இதுபற்றி உறவினர்களிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து சிறுமியின் உறவினர்கள் சென்று அந்த நபரை சரமாரியாக தாக்கி வியாசர்பாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அவரை செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சுனில் (36) என்பதும் பாரிமுனை குடோன் தெருவில் துணிக்கடையில் வேலை செய்து வருவதும் தெரிந்தது. போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: