மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நாளை நடை சாத்தப்படும் என கோயில் இணை கமிஷனர் சுரேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை: மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் நாளை (ஏப்.4) நடைபெறுகிறது.
இதையொட்டி நாளை காலை 4 மணியளவில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பஞ்சமூர்த்திகளுடன் கோயிலில் இருந்து புறப்பாடகி, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் செல்கின்றனர். அங்கு திருக்கல்யாண உற்சவத்தில் எழுந்தருளி, மீண்டும் இரவு அங்கிருந்து புறப்பாடகி, நள்ளிரவு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு வந்து சேர்த்தியாவரர்கள். எனவே, நாளை காலை 4 மணி முதல் அம்மன், சுவாமி திரும்ப வரும் வரை கோயில் நடை சாத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
