அரியலூரில் பரபரப்பு நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

அரியலூர், ஏப். 3: அரியலூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் அங்குலம் அங்குலமாக சோதனை மேற்கொண்டனர். அரியலூர் தலைமை குற்றவியல் நீதிமன்ற மெயில் ஐடிக்கு, மெயில் ஒன்று வந்துள்ளது. அதில் அரியலூர் நீதிமன்ற வளாகத்தில் விரைவில் 13 சயனைடு குண்டுகள் வெடிக்கவுள்ளது. எனவே அனைவரும் வெளியேறுங்கள். எங்களுக்குச் சொத்து சேதம் மட்டுமே தேவை தயவுசெய்து அங்கிருக்கும் மனிதர்கள் அனைவரையும் வெளியேற்றிவிடுங்கள் என்று தகவல் சொல்லப்பட்டிருந்தது.

இதுகுறித்து நீதிமன்ற அலுவலர்கள் அரியலூர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனை அடுத்து நீதிமன்ற வளாகத்திற்கு வரவழைக்கப்பட்ட அரியலூர் மாவட்ட போலீசார் நீதிமன்றத்தில் இருந்த அனைவரையும் வெளியேறும்படி கேட்டுக்கொண்டனர். பின்னர் வெடிகுண்டு கண்டறியும் கருவி, மோப்பநாய் மோனா உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் கோர்ட் வளாகம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர். மர்ம நபர்களிடமிருந்து வெடிகுண்டு இமெயில் வந்ததால் நீதிமன்ற மன்ற வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இதே போல் அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் மெயில் வந்தது குறிப்பிடத்தக்கது.

 

Related Stories: