அதிமுகவிற்கு போட்டியாக பாஜ பிரமுகர் மனு தாக்கல்

தமிழகத்தில் அதிமுக-பாஜ கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த கூட்டணியில் பாஜவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜ வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் வெளியாகவில்லை. ஈரோடு மாவட்டம் கோபி தொகுதி அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அதிமுகவுக்கு போட்டியாக பாஜ முன்னாள் நிர்வாகி ஒருவர் மனுதாக்கல் செய்துள்ளார். கோபி அருகே உள்ள கலிங்கியம் சின்னகுளத்தை சேர்ந்தவர் நாகராஜ சோழன் (43).

விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 2020 வரை கோபி மேற்கு ஒன்றிய பாஜ தலைவராக செயல்பட்டு வந்தார். தற்போது பாஜ உறுப்பினராக இருந்து வருகிறார். நேற்று கோபி சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு உறவினர்களுடன் வந்த நாகராஜ சோழன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதுகுறித்து, நாகராஜ சோழன் கூறும்போது, ‘‘அண்ணாமலை இருந்தபோதுகூட பாஜவில் வளர்ச்சி இருந்தது. தற்போது எந்த வளர்ச்சியும் இல்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கோபியில் பாஜ 27 ஆயிரம் ஓட்டு வாங்கியது. தமிழ்நாட்டில் தற்போது 27 தொகுதிகளை மட்டும் பெற்று உள்ளது. இதனால் பாஜ வளர்ச்சி அடையாது. நான் போட்டியிடுவதற்காக கட்சி நடவடிக்கை எடுத்தாலும் கவலை இல்லை’’ என்றார்.

Related Stories: