திருமணம் ஆகாமலே கர்ப்பத்தை அறிவித்த நடிகை: ரசிகர்கள் அதிர்ச்சி

 

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மும்பையை சேர்ந்த பூனம் பாண்டே, தனது 19 வயதில் மாடலிங் உலகில் நுழைந்தார். அதன் மூலம் கிடைத்த அறிமுகத்தின் வாயிலாக பாலிவுட் சினிமாவில் வாய்ப்பு தேடி வந்தது. 2013ம் ஆண்டு ‘நாஷா’ என்ற திரைப்படத்தில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்த போதும், அந்த படத்தின் மையக்கரு கடும் விமர்சனத்துக்கு ஆளானது.

முதல் படத்திலேயே சர்ச்சைக்கு வித்திட்ட பூனம் பாண்டே, அடுத்தடுத்த படங்களில் நடித்து கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கிரங்கடித்தார். கடந்த 2011 ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றால், மைதானத்தில் நிர்வாணமாக உலா வருவதாக கூறி சர்ச்சையில் சிக்கினார். ஆனால், அதற்கு எழுந்த கடும் எதிர்ப்பால் தனது முடிவை மாற்றி கொண்டதாக கூறி ஜகா வாங்கினார்.

இதேபோன்று 2012ல் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மகுடம் சூடினால், நிர்வாண போஸ் கொடுப்பதாக கூறினார். மறுபுறம் சமூக வலைத்தளங்களிலும் தனது ஆபாச வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை பதிவிட்டு சர்ச்சை வளையத்தில் சிக்கினார். அதேபோல், புற்றுநோயால் உயிரிழந்து விட்டதாக நாடகமாடி பலரின் கண்டனத்திற்கு ஆளானார். இப்படி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி, சர்ச்சையின் நாயகியாக உருவெடுத்தார். இதற்கிடையே தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுவிட்ட நிலையில்தான், தனிமையில் இருந்து வருகிறார். விவாகரத்திற்கு பின் அடுத்த திருமணம் தொடர்பாக எங்கும் பேசாத நிலையில் இப்போது அவர் திடீரென தனது கர்ப்பகால புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

மேலும் அந்த பதிவில், பால் பாட்டில் மற்றும் குழந்தைகளின் முகங்கள் போன்ற ஈமோஜிகளையும் பதிவிட்டிருந்தார். கடந்த சில நாட்கள் முன்புதான் பூனம் பாண்டே ஒரு இளைஞருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அந்த இளைஞரின் முகம் தெரியாதவாறு எடுக்கப்பட்டிருந்த அந்த புகைப்படத்தில் அவரை கட்டியணைத்தவாறு பூனம் பாண்டே போஸ் கொடுத்திருந்தார். இதனால் அவர் திருமணம் ஆகாமலே கர்ப்பம் தரித்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

Related Stories: