போச்சம்பள்ளி, ஏப்.2: மத்தூர் அருகே கெரிகேப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், குழந்தைகளை கொண்டாடுவோம் பள்ளி ஆண்டு விழா நடந்தது. விழாவில், பாரம்பரிய விளையாட்டு விழா, மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், மாணவர்களுக்கு பரிசு அளிப்பு மற்றும் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு பட்டாமளிப்பு விழா நடந்தது. அதனை தொடர்ந்து, 2026-27 கல்வி ஆண்டுக்காக புதிதாக சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு, கல்வி உபகரணங்கள் வழங்கி கிரீடம் அணிவித்து வரவேற்கப்பட்டது. பள்ளி மாணவர்களின் பரதநாட்டியம் மற்றும் சிலம்பாட்டம் நிகழ்ச்சி நடந்தது. அதே போல், பள்ளியில் இந்த கல்வியாண்டில் 5ம் வகுப்பு முடித்து, 6ம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு பட்டமளிப்பு என பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.
