ஆந்திராவில் இருந்து பர்கூருக்கு வந்த வாலிபர் மாயம்

கிருஷ்ணகிரி, ஏப். 2: ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டம் கூசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜப்பா. இவரது மகன் சுரேஷ் (19), பொக்லைன் ஆபரேட்டர். இவரது நண்பர் கார்த்தி. இவர் தக்காளி வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 30ம் தேதி கார்த்தி, சுரேஷூடன் தக்காளி வியாபாரத்துக்காக பர்கூர் வந்தார். பின்னர், பர்கூர் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு சுரேஷை இறக்கி விட்டு, கார்த்தி சொந்த வேலையாக சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, சுரேஷை காணவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தந்தை ராஜப்பாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் சம்பவ இடம் வந்து மகனை தேடியும் கிடைக்காததால், நேற்று முன்தினம் பர்கூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

Related Stories: