இல்லறம் நல்லறமாக அமைய வேண்டுமா?

நன்றி குங்குமம் தோழி

*இடையிடையே நேரம் கிடைக்கும்போது மனைவியை வெளியிடங்களுக்கு, சினிமாவுக்கு, கோயிலுக்கு அழைத்து செல்வது நல்லது.

*பெருமைக்காக தேவையற்ற பொருட்களையெல்லாம் வாங்கி வீடு நிறைய குவித்து வைத்துக் கொள்ளக் கூடாது.

*தம்பதிகள் தங்கள் குழந்தைகளின் பார்வையில் படும்படி சண்டையிடவோ, அநாகரிகமாக நடந்து கொள்ளவோ கூடாது.

*தம்பதிகள் தங்களுடைய கோபதாபங்களை அதிக காலம் நீடிக்கவிடக் கூடாது.

*வீண் விளம்பரங்களையோ, ஆசை வார்த்தைகளையோ நம்பி மோசம் போய் விடக் கூடாது.

*நாட்டு நிலவரங்களை கூடிய வரை தெரிந்து வைத்திருப்பது நல்லது.

*அடுத்த வீட்டு பிரச்னைகளை அலசி ஆராய்ந்து, விமர்சித்து மகிழும் போக்கை தவிர்க்க வேண்டும்.

*சிறு சிறு கை தொழில்களை பெண்கள் கற்று வைத்திருப்பது நல்லது.

*வீட்டின் பொறுப்பை மனைவியிடம் ஒப்படைத்தால் மனைவி பொறுப்பாக நடந்து கொள்வாள்.

*குழந்தைகளிடம் தம் கஷ்டத்தை, வறுமை நிலையை பெற்றோர்கள் பதியம் போட்டு விடக் கூடாது.

அவ்வாறு செய்தால் குழந்தைகள் மனம் முடங்கி விடும்.

*அடுத்தவர்களிடம் தம் அந்தரங்க வாழ்க்கைப் பற்றி அடிக்கடி ஆலோசனை கேட்கக் கூடாது.

*குறைந்த வட்டி என்றாலும் தயங்காமல் கடன் வாங்கும் பழக்கத்தை கைவிட வேண்டும்.

*தேவையில்லாத பழக்க வழக்கங்களை குறைத்துக்ெகாள்ள வேண்டும்.

தொகுப்பு: இரா.ரெங்கசாமி, வடுகப்பட்டி.

Related Stories: