பொன்னமராவதி நகரபட்டியில் திமுகவில் இணைந்த ஏராளமான மாற்று கட்சியினர்: அரசு சாதனையால் ஈர்க்கப்பட்டதாக பெருமிதம்

பொன்னமராவதி, ஏப். 1: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே நகரப்பட்டியில் திமுக வேட்பாளர் ரகுபதி முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைந்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் ரகுபதி நகரப்பட்டியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

அப்போது மாவட்ட நெசவாளர் அணி துணைஅமைப்பாளர் சுந்தரி ராமையா ஏற்பாட்டில் அதிமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சியை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் அமைச்சர் ரகுபதி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதில் முன்னாள் எம்எல்ஏ ராம.சுப்புராம், வடக்கு ஒன்றியச்செயலாளர் முத்து, காங்கிரஸ் வட்டாரத்தலைவர் கிரிதரன், நகரத்தலைவர் பழனியப்பன், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் சிவரஞ்சனி, சிவசிதம்பரம், துரை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

Related Stories: