சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு எந்தெந்த தொகுதிகள் என்பது தொடர்பாக திமுக குழுவுடன், ஈஸ்வரன் மற்றும் கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு திருச்செங்கோடு மற்றும் பொள்ளாச்சி ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
இதையடுத்து இந்த 2 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை கொ.ம.தே.க நேற்று அறிவித்தது. அதன்படி திருச்செங்கோடு தொகுதியில் ஏற்கனவே அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பொதுச்செயலாளர் ஈஸ்வரன் மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் நித்தியானந்தன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட இரண்டு பேரும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
