திமுகவில் போட்டியிடும் 164 வேட்பாளர்களும் அறிவிப்பு: கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் போட்டி; சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலின்

* 60க்கும் மேற்பட்ட புதுமுகங்களுக்கு வாய்ப்பு
* 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை
* 19 பெண் வேட்பாளர்கள் போட்டி

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக போட்டியிடும் 164 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை கொளத்தூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் போட்டியிடுகின்றனர். 60க்கும் மேற்பட்ட புதுமுகங்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 19 தொகுதிகளில் பெண்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். தற்போது அமைச்சர்களாக உள்ள 3 பேருக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடக்கிறது. இதற்காக வேட்புமனு தாக்கல் வரும் 30ம் தேதி (நாளை) தொடங்க உள்ளது. தேர்தலுக்கு இன்னும் குறுகிய நாட்களே எஞ்சியுள்ளது. இந்நிலையில், திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை முடித்து, நேற்று கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எவை என்பதையும் அறிவித்தது. திமுக தனது கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு 70 தொகுதிகளை வழங்கியுள்ளது. இதன் மூலம் திமுக 164 இடங்களில் போட்டியிடுகிறது. இந்நிலையில் சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.

தொடர்ந்து அவர் அளித்த பேட்டி: நடைபெற இருக்கும் தமிழ்நாடு 17-வது சட்டப்பேரவை தேர்தலில் திமுகவின் சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர்கள் பட்டியலை உங்கள் முன்னால் வெளியிடுவதில் பெருமைப்படுகிறேன். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, நான் பலமுறை சொன்னது போன்று, அரசியல் கூட்டணி மட்டுமல்ல; கொள்கைக் கூட்டணி. கூட்டணி எண்ணிக்கையில் தொகுதிகளைப் பகிர்ந்து கொண்டது ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில், தமிழ்நாடு சட்டப்பேரவையின் 234 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் 164 தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள்.

70 தொகுதிகளைத் தோழமைக் கட்சிகளோடு பகிர்ந்து கொண்டிருக்கிறோம். தோழமைக்கு ஒதுக்கிய தொகுதிகளுள் 11 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். ஆக மொத்தம் 175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னமும், 59 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளின் சின்னத்திலும் போட்டியிடுகிறோம். தற்போது வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு இந்தியாவின் முதன்முதலாக ஆட்சி அமைத்த மாநிலக் கட்சியான திமுகவின் வேட்பாளர்களை அண்ணாவின் சார்பிலும், கலைஞரின் சார்பிலும் நான் அறிவித்துள்ளேன்.

இவர்கள் வேட்பாளர்கள் மட்டுமல்ல; வெற்றி வேட்பாளர்கள். திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும். இது உறுதி… உறுதி… உறுதி… இதில் 164 வேட்பாளர்களை நான் அறிவித்திருக்கிறேன். இதுபோக 11 வேட்பாளர்களுக்கும் உதயசூரியன் சின்னம் இருக்கிறது. அது தனித்தனி கட்சிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அனைவரும் அதிமுக முன்பே அறிவித்துவிட்டது. திமுக இன்னும் அறிவிக்கவில்லையே என்று கேட்டார்கள். நாங்கள் கொஞ்சம் லேட்டாக வந்தோம்; ஆனால், லேட்டஸ்ட்-ஆக வந்திருக்கிறோம். ஏனென்றால் பல கூட்டணிக் கட்சிகள் இருக்கிறது.

அனைத்துக் கட்சிகளுடனும் அமர்ந்து பொறுமையாக, அவர்கள் கேட்பது; நாங்கள் சொல்வது; மற்ற கட்சிகள் கேட்பது என்றெல்லாம் இருந்தது. அவை அனைத்தையும் சரிசெய்து, அனைவரையும் திருப்தி செய்து, அனைவரும் திருப்தியாக ஒப்புக்கொண்டு, அதன்பிறகு கையொப்பமிட்டு, அந்த அடிப்படையில்தான் செய்திருக்கிறோமே தவிர, வேறு ஒன்றும் இல்லை. காலம் தாழ்த்தப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார். திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார்.

அதே போல திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன்- காட்பாடி, அமைச்சர்கள் கே.என்.நேரு- திருச்சி மேற்கு, ஐ.பெரியாமி-ஆத்தூர், எ.வ.வேலு- திருவண்ணாமலை, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்- குறிஞ்சிப்பாடி, தா.மோ.அன்பரசன்- ஆலந்தூர், மா.சுப்பிரமணியன்- சைதாப்பேட்டை, பி.கே.சேகர்பாபு- துறைமுகம் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போடி நாயக்கனூர் தொகுதியில் போட்டியிடுகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த 164 திமுக வேட்பாளர்களில் பட்டம் பெற்றவர்கள் 125 பேர். பெண்கள் 19 பேர் இடம்பெற்றுள்ளனர். முனைவர்கள் 7 பேர். மருத்துவர்கள் 15 பேர். பொறியியல் பட்டதாரிகள் 17 பேர். சட்டம் படித்தவர்கள் 29 பேர். அதுமட்டுமல்ல, புதுமுகம் என்று கணக்கெடுத்துக் கொண்டால், 60க்கு மேல் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வேட்பாளர் பட்டியல் வெளியிடும் போது பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் கனிமொழி, திருச்சி சிவா, ஆ.ராசா, மு.பெ.சாமிநாதன், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர். திமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்த பின்னர் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, திமுக இளைஞர் அணி செயலாளர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

164 தொகுதிக்கான திமுக வேட்பாளர் பட்டியல்
1. கன்னியாகுமரி ரெ.மகேஷ்,
2. நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின்
3. ராதாபுரம் மு.அப்பாவு
4. பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப்
5. திருநெல்வேலி சு.சுப்பிரமணியன்
6. ஆலங்குளம் பால் மனோஜ் பாண்டியன்
7. தென்காசி டாக்டர் கலை கதிரவன்
8. வாசுதேவநல்லூர் ஈ.ராஜா
9. கோவில்பட்டி கா.கருணாநிதி
10. ஓட்டபிடாரம் (தனி) பி.எம்.ராமஜெயம்
11. திருச்செந்தூர் அனிதா ராதாகிருஷ்ணன்
12. தூத்துக்குடி கீதா ஜீவன்
13. விளாத்திகுளம் ஜி.வி.மார்கண்டேயன்
14. முதுகுளத்தூர் ராஜகண்ணப்பன்
15. ராமநாதபுரம் காதர்பாட்சா (எ) முத்துராமலிங்கம்
16. பரமக்குடி (தனி) கே.கே.கதிரவன்
17. திருச்சுழி தங்கம் தென்னரசு
18. அருப்புக்கோடை கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்
19. சாத்தூர் அ.கடற்கரை ராஜ்
20. ராஜபாளையம் சௌ.தங்கப்பாண்டியன்
21. கம்பம் நா.ராமகிருஷ்ணன்
22. போடிநாயக்கனூர் ஓ.பன்னீர்செல்வம்
23. ஆண்டிப்பட்டி ஆ.மகராஜன்
24. திருமங்கலம் சேடப்பட்டி மு.மணிமாறன்
25. திருப்பரங்குன்றம் கிருத்திகா தங்கபாண்டி
26. மதுரை மேற்கு ரகு பாலாஜி
27. மதுரை மத்தி பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
28. மதுரை வடக்கு கோ.தளபதி
29. சோழவந்தான் (தனி) ஆ.வெங்கடேசன்
30. மதுரை கிழக்கு பி.மூர்த்தி
31. மானாமதுரை (தனி) ஆ.தமிழரசி ரவிக்குமார்
32. திருப்பத்தூர் கே.ஆர்.பெரியகருப்பன்
33. ஆலங்குடி சிவ வீ மெய்யநாதன்
34. திருமயம் எஸ்.ரகுபதி
35. புதுக்கோட்டை வை.முத்துராஜா
36. விராலிமலை கே.கே.செல்லபாண்டியன்
37. பேராவூரணி நா.அசோக்குமார்
38. பட்டுக்கோட்டை கா.அண்ணாதுரை
39. ஒரத்தநாடு ஆர்.வைத்திலிங்கம்
40. தஞ்சாவூர் சண்.ராமநாதன்
41. திருவையாறு துரை.சந்திரசேகரன்
42. கும்பகோணம் சாக்கோட்டை கா.அன்பழகன்
43. திருவிடைமருதூர் கோவி.செழியன்
44. திருவாரூர் பூண்டி கே.கலைவாணன்
45. மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா
46. வேதாரண்யம் மா.மீ.புகழேந்தி
47. பூம்புகார் நிவேதா முருகன்
48. புவனகிரி துரை கி.சரவணன்
49. குறிஞ்சிப்பாடி எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
50. நெய்வேலி சபா.ராஜேந்திரன்
51. திட்டக்குடி (தனி) சி.வி.கணேசன்
52. ஜெயங்கொண்டம் க.சொ.க.கண்ணன்
53. அரியலூர் லதா பாலு
54. குன்னம் சா.சி.சிவசங்கர்
55. பெரம்பலூர் (தனி) எஸ்.டி.ஜெயலட்சுமி
56. முசிறி என்.எஸ்.கருணைராஜா
57. மண்ணச்சநல்லூர் சீ.கதிரவன்
58. லால்குடி த.பாரிவள்ளல்
59. திருவெறும்பூர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
60. திருச்சி கிழக்கு இனிகோ இருதயராஜ்
61. திருச்சி மேற்கு கே.என்.நேரு
62. ஸ்ரீரங்கம் எஸ்.துரைராஜ்
63. குளித்தலை சூரியனூர் அ.சந்திரன்
64. கிருஷ்ணராயபுரம் (தனி) சி.கே.ராஜா
65. கரூர் ஆசி.எம்.தியாகராஜன்
66. அரவக்குறிச்சி மொஞ்சனூர் ஆர்.இளங்கோ
67. வேடசந்தூர் டி.சாமிநாதன்
68. திண்டுக்கல் ஐ.பி.செந்தில்குமார்
69. நிலக்கோட்டை (தனி) நாகஜோதி
70. ஆத்தூர் இ.பெரியசாமி
71. ஒட்டன்சத்திரம் அர.சக்கரபாணி
72. மடத்துக்குளம் இரா. ஜெயராமகிருஷ்ணன்
73. உடுமலைப்பேட்டை மு.ஜெயகுமார்
74. வால்பாறை (தனி) ஆ.சுதாகர்
75. கிணத்துக்கடவு கே.வி.கே.எஸ்.சபரி கார்த்திகேயன்
76. கோயமுத்தூர் தெற்கு வி.செந்தில்பாலாஜி
77. தொண்டாமுத்தூர் என்.ஆர்.கார்த்தியேன்
78. கோயமுத்தூர் வடக்கு செந்தமிழ்செல்வன்
79. சூலூர் தளபதி முருகேசன்
80. பல்லடம் க.செல்வராஜ்
81. திருப்பூர் தெற்கு ந.தினேஷ்குமார்
82. அவினாசி(தனி) டாக்டர். கோகிலா மணி
83. மேட்டுப்பாளையம் கவிதா கல்யாணசுந்தரம்
84. குன்னூர் கே.எம்.ராஜூ பி.காம்.,
85. கூடலூர்(தனி) மு.திராவிடமணி
86. கோபிச்செட்டிபாளையம் என். நல்லசிவம்
87. அந்தியூர் எம்.சிவபாலன்
88. பவானி கே.ஏ.சேகர் (எ) கே.ஏ.சந்திரசேகர்
89. பெருந்துறை தோப்பு என்.டி.வெங்கடாசலம்
90. காங்கயம் மு.பெ.சாமிநாதன்
91. தாராபுரம் (தனி) டாக்டர் இந்திராணி
92. ஈரோடு மேற்கு சு.முத்துசாமி
93. குமாரபாளையம் எஸ்.பாலு
94. பரமத்திவேலூர் கே.எஸ்.மூர்த்தி
95. நாமக்கல் ப.இராணி
96. சேந்தமங்கலம் (தனி) பி.பூமலர்
97. ராசிபுரம்(தனி) டாக்டர் மா.மதிவேந்தன்
98. வீரபாண்டி டாக்டர் ஆ.கா.தருண்
99. சேலம் தெற்கு எம்.லோகநாதன்
100. சேலம் வடக்கு இரா.இராஜேந்திரன்
101. சங்ககிரி மு.மணிகண்டன்
102. எடப்பாடி காசி
103. மேட்டூர் மிதுன் சக்ரவர்த்தி
104. ஏற்காடு (தனி) டி.எம்.ரேவதி மாதேஸ்வரன்
105. கெங்கவல்லி (தனி) கு.சின்னதுரை
106. சங்கராபுரம் தா. உதயசூரியன்
107. ரிஷிவந்தியம் வசந்தம் கார்த்திகேயன்
108. உளுந்தூர்பேட்டை ஜி.ஆர்.வசந்தவேல்
109. திருக்கோயிலூர் பொன்.கௌதமசிகாமணி
110. விக்கிரவாண்டி அன்னியூர் சிவா (எ) அ.சிவசண்முகம்
111. விழுப்புரம் டாக்டர் இரா.லட்சுமணன்
112. வானூர் (தனி) கௌதம் திராவிடமணி
113. செஞ்சி கே.எஸ்.மஸ்தான்,
114. வந்தவாசி (தனி) எஸ்.அம்பேத்குமார்
115. செய்யாறு ஓ.ஜோதி
116. ஆரணி மகாலட்சுமி கோவர்த்தனன்
117. கலசப்பாக்கம் பெ.சு.தி.சரவணன்
118. கீழ்பென்னாத்தூர் கு.பிச்சாண்டி
119. திருவண்ணாமலை எ.வ.வேலு
120. செங்கம் மு.பெ.கிரி.
121. அரூர் அ. சண்முகம்
122. பாப்பிரெட்டிப்பட்டி பெ.பழனியப்பன்
123. பாலக்கோடு டாக்டர் டி.என்.வி. செந்தில்குமார்
124. ஓசூர் எஸ்.ஏ. சத்யா
125. வேப்பனஹள்ளி பி.எஸ்.சீனிவாசன்
126. பர்கூர் தே.மதியழகன்
127. திருப்பத்தூர் அ.நல்லதம்பி
128. ஜோலார்பேட்டை கவிதா தண்டபாணி
129. ஆம்பூர் அ.செ.வில்வநாதன்
130. கே.வி.குப்பம் (தனி) ராஜேஸ்வரி மோகன்காந்தி
131. அணைக்கட்டு ஏ.பி.நந்தகுமார்
132. வேலூர் ப.கார்த்திகேயன்
133. ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன்
134. காட்பாடி துரைமுருகன்
136. காஞ்சிபுரம் நித்யா சுகுமார்
137. உத்திரமேரூர் க.சுந்தர்
138. மதுராந்தகம் (தனி) எஸ்.அமுலு பொன்மலர்
139. செங்கல்பட்டு எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி
140. தாம்பரம் ஆர்.எஸ்.கிருத்திகாதேவி
141. ஆலந்தூர் தா.மோ.அன்பரசன்
142. சோழிங்கநல்லூர் ச.அரவிந்த் ரமேஷ்
143. மயிலாப்பூர் த.வேலு
144. தியாகராயநகர் ராஜா அன்பழகன்
145. சைதாப்பேட்டை மா.சுப்பிரமணியன்
146. விருகம்பாக்கம் பிரபாகர்ராஜா
147. அண்ணாநகர் நே.சிற்றரசு
148. ஆயிரம் விளக்கு டாக்டர் எழிலன் நாகநாதன்
149. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி உதயநிதி ஸ்டாலின்
150. துறைமுகம் பி.கே.சேகர்பாபு
151. ராயபுரம் சுபேர்கான்
152. எழும்பூர் (தனி) தமிழன் பிரசன்னா
153. திரு.வி.க.நகர் (தனி) கே.எஸ்.ரவிச்சந்திரன்
154. வில்லிவாக்கம் கார்த்திக் மோகன்
155. பெரம்பூர் ஆர்.டி.சேகர்
156. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் ஜே.ஜே.எபினேசர்
157. மாதவரம் எஸ்.சுதர்சனம்
158. அம்பத்தூர் அ.பு.பூர்ணிமா
159. மதுரவாயல் காரம்பாக்கம் கணபதி
160. ஆவடி சா.மு.நாசர்
161. பூந்தமல்லி ஆ.கிருஷ்ணசாமி
162. திருவள்ளூர் வி.ஜி.ராஜேந்திரன்
163. கும்மிடிப்பூண்டி டி.ஜெ. கோவிந்தராஜன்
164. கொளத்தூர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்

* வாய்ப்பு மறுக்கப்பட்ட 3 அமைச்சர்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட திமுக வேட்பாளர் பட்டியலில் தற்போது அமைச்சர்களாக உள்ள 3 பேருக்கு இந்த முறை போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அதாவது தற்போது பால்வளத்துறை அமைச்சராக இருக்கும் மனோ தங்கராஜ், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சராக இருக்கும் ஆர்.காந்தி, மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோருக்கு சீட் வழங்கப்படவில்லை. அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கடந்த முறை போட்டியிட்ட தாராபுரம் தொகுதியில் திமுக சார்பில் டாக்டர் இந்திராணி போட்டியிடுகிறார். மனோ தங்கராஜ் போட்டியிட்ட பத்மநாபபுரம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் காந்தியின் ராணிப்பேட்டை தொகுதியில் அவரது மகன் வினோத் காந்திக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. திருக்கோவிலூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சீட் வழங்கப்படவில்லை. அந்த தொகுதியில் பொன்முடியின் மகன் டாக்டர் பொன்.கவுதம சிகாமணி போட்டியிடுகிறார்.

* சென்னையில் 6 எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை
சென்னை மாவட்டத்தில் தற்போது எம்எல்ஏக்களாக உள்ள 6 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அதாவது தி.நகர் எம்எல்ஏ கருணாநிதி, அண்ணா நகர்- எம்.கே.மோகன், வில்லிவாக்கம்-வெற்றியழகன், ராயபுரம்- ஐட்ரீம் மூர்த்தி, திரு.வி.க. நகர் தாயகம் கவி, எழும்பூர்- பரந்தாமன் ஆகியோருக்கு போட்டியிட சீட் வழங்கப்படவில்லை. இதில் அண்ணாநகர் தொகுதி எம்எல்ஏவாக உள்ள எம்.மோகனுக்கு பதிலாக, அவரது மகன் கார்த்திக் மோகன் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: