காங்கிரஸ்- பாஜ 5 தொகுதிகளில் மோதல்: மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 2 தொகுதிகளில் நேரடி போட்டி

 

சென்னை: தமிழக சட்டப் பேரவை தேர்தலில் 5 தொகுதிகளில் காங்கிரஸ்- பாஜ நேரடியாக மோதுகிறது. அதேபோன்று, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 2 தொகுதிகளில் பாஜவுடன் நேரடியாக மோதுகிறது. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டை முடித்து திமுக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதை தொடர்ந்து, திமுக கூட்டணி கட்சிகளும் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து அதிரடி காட்டின. இந்நிலையில் ஊட்டியில் காங்கிரஸ்-பாஜ நேரடியாக போட்டியிடுகின்றன. 2021 தேர்தலில் வெறும் 5000 வாக்குகளில் பாஜ வாய்ப்பை இழந்தது குறிப்பிடதக்கது.

இதேபோன்று அறந்தாங்கி தொகுதி, காங்கிரசிற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் பாஜவுடன் நேரடியாக மோதுகிறது. அதேபோல் குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் நேருக்கு நேர் பாஜ வேட்பாளர்களுடன் மோத உள்ளனர். அதேபோன்று, தளி மற்றும் கந்தர்வகோட்டை ஆகிய 2 தொகுதிகளில் பாஜ-கம்யூனிஸ்ட்கள் இடையே போட்டி நிலவுகிறது. மொடக்குறிச்சி மற்றும் மதுரை தெற்கு ஆகிய 2 தொகுதிகளில் பாஜ -மதிமுக இடையே பலத்த போட்டி நிலவுகிறது.

Related Stories: