4 தொகுதிகளுக்கான மதிமுக வேட்பாளர்கள்: வைகோ அறிவிப்பு

 

சென்னை: திமுக கூட்டணியில், மதிமுக சார்பில் போட்டியிடும் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மதிமுகவிற்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலினும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் கையெழுத்திட்டனர். அதில் மூன்று தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், 1 தொகுதியில் தனிச் சின்னத்திலும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து 4 தொகுதிகளில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு நேர்காணல் நடந்தது. இறுதியில் 4 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் தேர்வு செய்து நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி மதுரை தெற்கு தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ பூமிநாதன், கடையநல்லூர் தொகுதியில் ராஜேந்திரன், மொடக்குறிச்சி தொகுதியில் செந்தில் நாதன் ஆகியோர் உதயசூரியன் சின்னத்திலும், சீர்காழி தொகுதியில் செந்தில் செல்வன் தனிச்சின்னத்திலும் போட்டியிடுகின்றனர் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Related Stories: