சென்னை: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ. 1,07,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச்சந்தை முதலீடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஈரான் அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான போர் காரணமாக தங்கத்தின் விலையில் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
தங்கம் விலை நேற்று காலையில் பவுனுக்கு ரூ.560 உயர்ந்து, மாலையில் ரூ.2,560 குறைந்தது. தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக விலை குறைந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 24ம் தேதி மாலையில் தங்கம் திடீரென உயர்ந்தது. அன்றைய தினம் மாலையில் பவுனுக்கு ரூ.2000 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்துக்கு விற்னையானது. தொடர்ந்து நேற்று முன்தினமும் தங்கம் விலை உயர்ந்தது.
நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.350 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,600க்கும், பவுனுக்கு ரூ.2,800 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 8,800க்கும் விற்பனையானது. தொடர்ந்து நேற்று காலையும் தங்கம் விலை உயர்வை தான் சந்தித்தது. அதாவது நேற்று காலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,670க்கும், பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,09,360க்கும் விற்பனையானது. வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.260க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.2.60 லட்சத்துக்கும் விற்பனையானது.
இந்நிலையில் நேற்று மாலையில் தங்கம் விலை திடீரென அதிரடியாக குறைந்தது. அதாவது, நேற்று மாலை கிராமுக்கு ரூ.320 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,350க்கும், பவுனுக்கு ரூ.2,560 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 6,800க்கும் விற்றது. இந்த திடீர் விலை குறைவு நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது. அதே நேரத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.260க்கும், பார் வெள்ளி ரூ.2.60 லட்சத்துக்கும் விற்பனையானது.
இன்று சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ. 1,07,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.13,430க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.245க்கு விற்பனையாகிறது.
