ஒரு சவரன் ஆபரணத்தங்கம் விலை ரூ.2,720 குறைந்து ரூ.1,04,000க்கு விற்பனை… ஒரு கிராம் ரூ.13,000 ஆக நிர்ணயம்

சென்னை: தங்கம் விலை ஈரான்-இஸ்ரேல், அமெரிக்கா இடையிலான போர் தொடக்கத்தில் அதிரடியாக உயர்ந்து வந்தது. அதுவும் காலை, மாலை என உயர்ந்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகு தங்கம் விலையில் ஏற்றம், இறக்க நிலை காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 13ம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து குறைய தொடங்கியது. தொடர்ந்து ஒரு வாரத்தில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.9,760 வரை குறைந்தது. இந்த நிலையில் 20ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 11,600க்கு விற்பனையானது. 21ம் தேதி மீண்டும் தங்கம் விலை குறைந்தது. அன்றைய தினம் கிராமுக்கு ரூ.330 குறைந்து ஒரு கிராம் ரூ.13,620க்கும், பவுனுக்கு ரூ.2,640 குறைந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 8,960க்கும் விற்பனை ஆனது.

ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதுவும் வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கம் விலை காலை, பிற்பகல் என பவுனுக்கு ரூ.7600 குறைந்த நிலையில், மாலையில் திடீரென பவுனுக்கு ரூ.5360 உயர்ந்தது. போர் நிறுத்தம் அறிவிப்பு வெளியான மறுநிமிடமே விலை அதிரடியாக எகிறி ஒரு சவரன் 1 லட்சத்து 6,720க்கு விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.250க்கும், கிலோவுக்கு ரூ.15 ஆயிரம் உயர்ந்து, பார் வெள்ளி ரூ.2.50 லட்சத்துக்கும் விற்பனையானது.

இந்த நிலையில், இன்றைய காலை நிலவரப்படி, ஆபரணத்தங்கம் ஒரு சவரன் ரூ.2,720 குறைந்து ரூ.1,04,000க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.340 குறைந்து ரூ.13,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல், சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.240க்கும் கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் குறைந்து, பார் வெள்ளி ரூ.2.40 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

Related Stories: