கோயில் பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு

தேவதானப்பட்டி, மார்ச் 27: தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே குள்ளப்புரம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் முருகன்(60). இவர் ஸ்ரீஅய்யம்பெருமாள் கோயிலில் பூசாரி உள்ளார். இந்நிலையில் கடந்த 20ம் தேதி கோயிலில் பூஜை முடித்து இரவு வீட்டிற்கு வந்துவிட்டார். பின்னர் 24ம் தேதி மாலை கோயிலுக்கு சென்றுள்ளார். அப்போது பார்த்தபோது கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

இதை பார்த்த முருகன் கோயிலுக்கு சென்று உள்ளே பார்த்தபோது, அங்கு இருந்த குத்துவிளக்கு, பித்தளை பானை, கரண்டி, பெரிய மணி, மைக்செட் ஆம்பியர் உள்ளிட்ட பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து பூசாரி முருகன் ஜெயமங்கலம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Related Stories: