கொடைக்கானல், மார்ச் 27: பிரபல சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு, வேனில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் வந்திருந்தனர். நேற்று சுற்றுலா தலங்களை பார்த்து விட்டு மாலையில் மதுரையை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது, கொடைக்கானல்-வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையில் உள்ள டம் டம் பாறையை அடுத்த மலையடிவார பகுதியில் சென்று கொண்டிருந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த சுற்றுலாப்பயணிகள், நல்வாய்ப்பாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். மரத்தின் மீது மோதியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
