திருத்துறைப்பூண்டி சீரடி சாய்பாபா ஆலயத்தில் வியாழன் சிறப்பு வழிபாடு

திருத்துறைப்பூண்டி, மார்ச் 27: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நாகை சாலையில் உள்ள புகழ் பெற்ற சீரடி சாய்பாபா ஆலயத்தில் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாபா தரிசனம் செய்வது வழக்கம். நேற்று வியாழக்கிழமைகளில் காலையிலிருந்து இரவு வரை ஆயிரக்கணக்கான பாபா பக்தர்கள் பாபாவை வழிபட திரண்டு வந்தனர்.

நேற்று காலையிலிருந்து பால், சந்தனம், நெய், தேன், பன்னீர் போன்ற வாசனை பொருட்களால் பாபாவிற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பாபாவை தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

 

Related Stories: