பேராவூரணி, மார்ச் 27: பேராவூரணி சட்டமன்றத் தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதல் கட்ட தேர்தல் பயிற்சி நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. இது குறித்து பேராவூரணி சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கலியமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 ஐ முன்னிட்டு 177 பேராவூரணி சட்டமன்றத் தொகுதியில் உள்ள வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு மண்டல அலுவலர்கள் மூலம் முதல் கட்ட தேர்தல் பயிற்சி பேராவூரணி டாக்டர் ஜே.ஸி.குமரப்பா பள்ளியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. அனைவரும் தவறாமல் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
