தஞ்சாவூர், மார்ச் 27: பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு வைப்பறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது. பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களான வாக்கு செலுத்தும் கருவி-378, கட்டுப்பாட்டு கருவி -378, வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை கருவி-409 ஆகியவை ஒதுக்கீடு செய்யப்பட்டு பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாக தரை தளத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான பாதுகாப்பு வைப்பறையில் பாபநாசம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையிலும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்தனவேல் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டது.
