ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு கோலப்போட்டி

ஒரத்தநாடு, மார்ச் 27: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பாநாடு ஆவிடநல்ல விஜயபுரத்தில் சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி மகளிர் குழுவினர் மூலம் கோலப்போட்டி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தமிழகத்தில் அடுத்த மாதம் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.இதனையொட்டி பல்வேறு பகுதிகளில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டம் பாப்பாநாடு ஆவிடநல்ல விஜயபுரத்தில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி மகளிர் சுய உதவிக்குழுவினர் மூலம் கோலப்போட்டி நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.  இதில் வட்ட வழங்கல் அதிகாரி கவிதா மற்றும் மகளிர் குழுவினர், வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

Related Stories: