புல்வயல் அரசு பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

இலுப்பூர், மார்ச் 27: அன்னவாசல் அருகே உள்ள புல்வயல் அரசு உயர்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் துவங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில் முருகன் துவக்கி வைத்தார்.

இப்பரணியில் கலந்து கொண்ட மாணவி, மாணவிகள் சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திய படி சாலை விதிகளை மதிப்போம், தலைக்கவசம் உயிர்க்கவசம், பயணத்தின் போது அலைபேசி பேசுவது உயிருக்கு ஆபத்தானது, படியில் பயணம் நொடியில் மரணம், ஓட்டுநர் உரிமம் இல்லாது வண்டி ஓட்டுதல் கூடாது போன்றவாறு விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியபடி ஊரின் முக்கிய சாலையின் வழியே வலம் வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் சமூகவியல் ஆசிரியர் சுரேகா செய்திருந்தார்.

 

Related Stories: