கீழ்வேளூர், மார்ச் 27: நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றியம் ஆந்தக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஐம்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ரம்யா, பெற்றோர் ஆசிரியர் தலைவர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளி தலைமையாசிரியர் ராஜேந்திரன் வரவேற்றார்.
விழாவிற்கு கீழ்வேளூர் வட்டார கல்வி அலுவலர் சுப்பிரமணியன் தலைமை வகித்து கபடிபோட்டி, பேச்சுப்போட்டி, பரதநாட்டியம், நடனம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
விழாவில், பள்ளி மாணவ, மாணவிகள் கலை நிகழ்சி நடைபெற்றது. விழாவில் பள்ளி மேலாண்மை குழு துணைத்தலைவர் ரிபாயா, ஆசிரியர்கள் ரமேஷ், ரமேஷ்குமார், காயத்ரி, சசிகலா, தான்யா மற்றும் பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
