வடமாநில தொழிலாளி கொலை மைத்துனர் அதிரடி கைது

பூதப்பாண்டி, மார்ச் 27: கீரிப்பாறை அருகே காளிகேசத்தில் இருந்து மணலோடை செல்லும் சாலையில் உள்ள அன்னாசி பழ தோட்டத்தில் கடந்த 22ம் தேதி ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அருண்குமார் சிங் (31) கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் சந்தேகத்தின்பேரில் உடன் வேலை செய்த 5 வடமாநில தொழிலாளர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் மதுபோதையில் வடமாநில தொழிலாளர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் அருண்குமார் சிங் கொலை செய்யப்பட்டுள்ள தெரியவந்துள்ளது. சம்பவத்தன்று அருண்குமார் சிங்குடன், அவரது சகோதரியின் கணவரான அருண்சிங் (36) மற்றும் சிலர் சேர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அருண்சிங், போதையில் அருண்குமார் சிங்கை பிடித்து கீழே தள்ளி உள்ளார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அருண்குமார் சிங் இறந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் அருண்சிங்கை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: