திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா கொடியேற்றம்

திண்டுக்கல், பிப். 17: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா வெகு விமரிசையாக நடக்கும். இந்த ஆண்டு திருவிழா கடந்த வாரம் முகூர்த்தக்கால் ஊன்றுதலுடன் துவங்கியது. தொடர்ந்து முக்கிய நிகழ்வான பூச்சொரிதல் விழா நடந்தது. இந்நிலையில் நேற்று பந்தல்கால் நடும் நிகழ்ச்சியை தொடர்ந்து பகல் 12 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. பின்னர் கொடிமரத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் கோயிலுக்குள் அம்மன் உலா வந்ததும் பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவங்கினர். இதில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் சுபாஷினி, பரம்பரை அறங்காவலர்கள் பாலகுரு, கணேசன், சண்முகம், முத்தரசன், மகாலட்சுமி, கண்ணன் கமலநாதன், தலைமை பூசாரி குமரேசன் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான பூக்குழி இறங்குதல் பிப்.26ம் தேதியும், தெப்ப திருவிழா மார்ச் 2ம் தேதியும் நடைபெறவுள்ளது.

Related Stories: